ஒரு புகைப்படம்… ஒரு வீடியோ… ஒரு வாழ்க்கையை சிதைக்கும் உண்மை, சட்டம், பாதுகாப்பு வழிகள் Revenge Porn (IBSA)
Revenge Porn (பழிவாங்க அந்தரங்க படம்) என்றால் என்ன? – இணைய காலத்தின் மறைமுக அச்சம்
Revenge Porn என்றால் என்ன?
இது எப்படி ஆரம்பித்தது? (இணையம் முன்னும் பின்னும்)
ஆனால், இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் பரவலாக பயன்படுத்தப்படத் தொடங்கிய பிறகு—குறிப்பாக 2010க்கு பிறகு—இந்த பிரச்சனை மிகவும் தீவிரமான ஒன்றாக மாறியது. ஒரு புகைப்படம் அல்லது காணொளி சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கானவர்களிடம் சென்றடையும் நிலை உருவானது.
இன்று, இளம் வயதிலேயே (பள்ளி, கல்லூரி நிலை) டிஜிட்டல் தொடர்புகள் அதிகரித்திருப்பதால், நம்பிக்கையுடன் பகிரப்படும் தனிப்பட்ட தருணங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான அபாயமும் அதிகரித்துள்ளது.”
காதல், நம்பிக்கை… மற்றும் தவறான முடிவுகள்
தன்னுடைய காதலன் தானே, கடைசி வரை இவன்தான் என நினைத்து மிகவும் நெருக்கமாக இருந்துவிடுகிறார்கள்.
இது தான் கொடுமை என்றால், எங்கே சென்றாலும் புகைப்படம் எடுப்பது போல் முதல் முறை, நினைவுகளைச் சேகரிக்கிறோம் என்று சொல்லி அதையும் புகைப்படம், காணொளினு எடுத்து வைத்து கொள்கிறார்கள்.
அந்த ஒரு புகைப்படம் தான் தன்னுடைய வாழ்க்கையை திருப்பி போடும் அளவிற்கு மாற்றும் என்று தெரிவதில்லை.
சில நேரங்களில், ‘புகைப்படம் இல்லை, video call தான்’ என்ற நம்பிக்கையிலும், அந்தரங்கமான விஷயங்கள் பகிரப்படுகின்றன. ஆனால், அவை பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கும்.
ஒரு உறவு நல்ல நிலையில் இருக்கும் போது, ‘இவர் இதுபோன்ற விஷயங்களை ஒருபோதும் செய்யமாட்டார்’ என்ற நம்பிக்கை இருப்பது இயல்பு. ஆனால் சூழ்நிலைகள் மாறும் போது, மனிதர்களின் நடத்தை கூட மாறக்கூடும்.
👉 இதன் அர்த்தம் யாரையும் குறை சொல்லுவது அல்ல.
👉 ஆனால் நம்பிக்கையுடன் எடுத்த முடிவுகளிலும் கூட, அபாயம் இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சனையில் பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அதே நேரத்தில், ஆண்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் மறக்கக்கூடாது.
Video Call, Photos… எப்படி ஆயுதமாக மாறுகிறது?
கணவன் மனைவியாக இருக்கும் நபர்கள், 2 குழந்தை பிறந்து நன்றாக புரிந்து வாழும்
நபர்களுக்கு இடையே சண்டை என்பது வரும்.
அப்படி இருக்கையில் பழகி 2 முதல் 3 மாதங்களுக்குள் அல்லது 1 முதல் 2
வருடங்களுக்குள், அதிலும் பதின்மப் பருவத்தில் புரிதல் என்பது மிக கடினம்.
சண்டை அதை தொடர்ந்து பிரிவு, அதை தொடர்ந்து காதல் இருந்தால்
பரவாயில்லை. ஆனால் பிரிவு என்று வந்ததும் ஒன்று சேர, சாமாதானம் செய்ய
போதுமான காலம் குடுக்காமல், தன்னிடம் இருக்கும் அந்தரங்க படங்களை காட்டி
மிரட்டுகிறார்கள்.
இதை வெளியிடுவதால் தனக்கு எந்த தீமையும் விளையப்போவது
இல்லை என்ற ஒரே காரணத்தினால் தன்னை நம்பிய ஒரு பெண்ணை, பெண்ணின்
மானத்தை வைத்து கோவத்தை, கையால் ஆகாத தனத்தை முடிக்க ஒரு கருவியாக
பயன்படுத்தி கொள்கிறார்கள்.
ஒரு உறவு முடிந்தாலும், அந்த உறவின் மரியாதை முடிந்து போகக்கூடாது
எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இல்லை. ஆனால் ஒருவருடைய குணம் என்ன
என்பது அவர்க்கு மட்டும் தான் தெரியும். பல வருடம் கூட வாழும் மனைவிக்கும்,
பெற்று வளர்த்த தாயிற்கும் கூட தெரியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத
உண்மை.
Red Flags:
- அடிக்கடி “photo அனுப்பு” என்று வற்புறுத்துவது
- video call போது எல்லை மீறிய நடத்தை அல்லது அதை பதிவு செய்வது
- உறவு முறிந்த பிறகு மிரட்டல் விடுவது
- “இது நம்ம இருவருக்குள்ளதான்” என்று நம்பிக்கை கட்டுவது
- தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முயற்சிப்பது
பாதிப்பின் ஆழம் எவ்வளவு ?
இது போன்று வெளிவந்த புகைப்படங்கள் மனதளவில் மற்றும் ஒரு குடும்பத்தை மிகவும் பாதிக்கும். அதுவும் பாதிக்கப்பட்ட நபர் வெளியில் தலைகாட்டவே முடியாத அளவிற்கு சமுதாயம் கொத்தி பிடுங்கும்.
மனஉளைச்சலில் இருந்து வெளி வரவே பல நாட்கள் பிடிக்கும். ஏன் 15 வருடம் 20 வருடம் கழித்தும் யாரவது ஒருவர் அது குடும்ப உறுப்பினராகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபராகவே கூட இருக்கலாம் அவர்களால் மீண்டும் அதை பார்க்க முடியும் என்பது கொடுமை.
பெண்கள் மட்டுமா பாதிக்கப்படுகிறார்கள்?
இந்த குற்றங்களில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இதனால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று அர்த்தமில்லை
ஒரு ஆண் அதை வெளியில் சொல்கிறான் என்றால் அதை இந்த சமூகம்
சிரிப்பில் நகர்ந்து விடுகிறது.
ஆண் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களுக்கான ஆதாரம் இங்கே
இந்த பதிவு பயம்படுத்த மட்டுமே அல்ல விழிப்புணர்வுக்காகவும் தான்.
பல விஷயங்கள் செய்து நம்மால் வெளிவர முடியும் ஆனால் அதற்கான தைரியம்
என்பது தேவை. Revenge porn என்ற ஒன்றை ஆரம்பித்து, அரசாங்கத்தால் கூட தடுக்க
முடியாமல் இருந்த ஒருவனை தடுத்த இந்த நபரை போல.
உலகத்தை அதிரவைத்த சம்பவம்
Revenge Porn என்ற ஒரு வார்த்தையை அதிக அளவில் பயன்படுத்தியது ஹண்டர் மூர் (Hunter Moore). அவனுக்கு இருக்கும் பட்ட பெயர் என்ன தெரியுமா? “the most hated man on the Internet”. (இணையத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதர்)
காரணம் அவனுடைய செயல். 2010’ல இரவு வாழ்க்கை (nightlife) புகைப்படம் பகிர ஆரம்பிக்கப்பட்ட ஒரு இணையதளம். சிறிது சிறிதாக மாறி நிர்வாண புகைப்படங்கள் பகிரும் ஒரு தளமாக மாறியது.
அது மட்டுமல்ல காதலிச்சு ஏமாத்துன பெண்ணுடைய நிர்வாண புகைப்படங்களை பகிர சொல்லியும் அழைப்புகளை விடுத்திருந்தான். அதையும் ஏற்று பல புகைப்படங்கள் வந்தது.
2011 கால கட்டத்திலேயே கிட்டத்தட்ட 13000$ வரை அந்த இணையதளம் வருமானம் ஈட்டியது. ஒரு மாதத்திற்கு 3 கோடி பார்வையாளர்களையும் வைத்திருந்தது.
அந்த இணையதளத்தில் பகிர்ந்த பல படங்கள் பெண்களின் விருப்பம் இன்றி பகிர்ந்த படங்கள் தான். அதை நீக்க சொல்ல கெஞ்சினாலும் நீக்காமல் இருந்தான் அந்த ஒரு கொடூர மிருகம்.
ஆண்களால் பகிரப்படும் பெண்களின் சமூக வலைதளத்தின் முகவரி, வீட்டின் முகவரி, தொலைபேசி எண் என எல்லாவற்றையும் பகிர்ந்தான். அது மட்டுமல்ல கணினி ஊடுருவல்காரர் (hackers) வைத்து கொண்டு அந்த பெண்களின் கணினியில் ஊடுருவி அதில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகளையும் எடுத்து பகிர்ந்தான்.
அதன் பிறகு ஒரு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாய் பல ஆதாரங்களை திரட்டி FBI'கு வழங்கி 2012ம் ஆண்டு கைதும் செய்யப்பட்டான். ஆரசாங்கம் நினைத்தும், முடக்க முடியாத ஒரு இணையதளத்தை, ஒரு தனி நபர் 12000$ விலைக்கு வாங்கி அதை முடக்குகிறார்.
இந்த சம்பவம் பற்றிய கூடுதல் தகவல்களை Federal Bureau of Investigation (FBI) இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட அறிக்கைகளிலும் படிக்கலாம்.
Netflix’ல இவனை வைத்து ஒரு ஆவணப்படத்தையும் வெளியிட்டது.
வெளிநாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது இல்லை, இஷ்டம்னா இருப்பாங்க இல்லாட்டி வேண்டாம் என்று சொல்லும் நபர்களுக்கே revenge porn (ரிவென்ஜ் போர்ன்) மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், நமது நாட்டில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் நடந்த சம்பவங்கள்
உள்ளூர், வெளியூர் வெளிநாடு என்று எல்லாம் இல்லை. எல்லா இடத்திலும் பாதிப்பு பாதிப்புதான். ஆனால், இருக்கும் இடத்திற்கு தகுந்தாற் போல் அதனுடைய பாதிப்பு இருக்கும்.
Revenge porn வெளிநாடுகளில் தான் நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இந்தியாவிலும் நடக்கிறது. பல உதாரணங்கள் சொல்ல முடியும். சமூக வளைத்தளத்தில் படித்தது. ரயில் கழிப்பறையில் பெயர், தொலைபேசி எண்ணை எழுதி வைத்து விடுகிறார்கள். அதை பார்த்து தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசுகிறார்கள் என்று போட்டிருந்தாங்க.
இது எல்லாம் நாம் கவனிக்க மறந்த சின்ன சின்ன விஷயங்கள். ஒரு வேலை உங்கள் கண்ணனுக்கு இந்த மாதிரி ஏதாவது தெரிந்த அதை அழிக்க எதாவது பண்ண முடியுமான்னு பாருங்க. கண்டிப்பா எதாவது ஒரு பெண் தப்பிக்க முடியும்.
சரி இணையத்தில் சென்று IBSA (Image-Based Sexual Abuse) பாத்த அத்தனை செய்திகள் வரும். எங்க இருந்தாலும் நல்ல இருந்த போதும்னு சொன்ன காலம் போயி எனக்கு இல்லாத ஒருத்தி இந்த உலகத்துல நிம்மதியா இருக்க கூடாது என்று நினைக்கும் காலத்திற்கு வந்துவிட்டோம் போல.
நம்ம இந்தியாவில் நடந்த revenge porn சம்பவம்.
2019 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. காதல் என்ற போர்வையில் நடந்த மிக பெரிய நிகழ்வு. அதை பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.
2025 இந்த வருடம் பத்தனம்திட்டாவில் நடந்த தொடர் பாலியல் துஷ்பிரயோகம்.
இந்தியாவில் இதற்கு என்று தனியா வழக்குகள் பதிவு செய்வது இல்லை. இதனால் சரியான தரவுகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது.
Revenge Pornக்கு சட்டம் இருக்கிறதா?
இதற்காக சட்டம் இருக்கிறதா என்றால் இந்தியாவில் தனியாக இல்லை. இந்தியாவில் இருக்கும் சட்டத்தை மற்ற நாடுகளின் சட்டத்தை பார்த்து விட்டு தனியாக பார்ப்போம்.
அமெரிக்கா: 2019’ல் தனியாக சட்டம் இயற்ற மும்மொழியப்பட்டது ஆனால் இன்று வரை இயற்றவில்லை. ஆனால் பல மாகாணங்கள் தனக்கென்று தனி சட்டம் கொண்டிருக்கிறது. குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை.
இங்கிலாந்து,ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் 2 வருடம் வரை சிறை
ஆஸ்திரேலியாவில் 7 வருடம் வரை
கனடாவில் 5 வருடம் வரை.
இந்தியாவில்
இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act, 2000)
ஒரு நபரின் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை, அவர்களின் அனுமதியின்றி படம்பிடித்து, வெளியிடுதல் அல்லது பகிர்தல் Section 66E – Violation of privacy (3 வருடம் சிறை மற்றும் ₹2 இலட்சம் அபராதம்)
பாலியல் ரீதியாக வெளிப்படையான அல்லது ஆபாசமான உள்ளடக்கங்களை வெளியிடுவது அல்லது பரப்புவது Section 67A – Publishing sexually explicit content (5 முதல் 7 வருடம் சிறை + ₹10 இலட்சம் அபராதம்)
இந்திய தண்டனைச் சட்டம் Indian Penal Code (IPC)
ஒரு பெண் தனிமையில் இருக்கும்போது, அவளது அனுமதியின்றி படம் பிடிப்பது அல்லது அத்தகைய படங்களைப் பரப்புவது போன்றவை Section 354C – Voyeurism (recording/sharing intimate acts)
ஒரு பெண்ணின் அடக்கத்தை (modesty) அவமதிக்கும் நோக்கில் வார்த்தைகள், சைகைகள் அல்லது செயல்களைப் பயன்படுத்துவது Section 509 – Insulting modesty of a woman (3 வருடம் வரை சிறை)
அவதூறு பரப்பும் குற்றத்திற்கு Section 500 – Defamation (2 வருடம் வரை சிறை) என இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்.
புகைப்படம் leak ஆனால் என்ன செய்ய வேண்டும்?
அதாவது உங்களது தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகள் வெளியே வந்து விட்டாலே அல்லது அதை வைத்து மிரட்டினாலோ உடனடியாக இணையவழி குற்றங்கள் தடுக்க இருக்கும் Cyber crime இணையத்தில் புகார் அளியுங்கள்.இதில் சிக்காமல் இருக்க எப்படி?
இந்த மாதிரி பிரச்சனையில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம். எதாவது வழி இருக்க என்றால்? இருக்கிறது. ஒரே சிறந்த வழி புகைப்படம் அல்லது காணொளி எடுக்காமல் இருப்பது மட்டுமே.
Digital Reality – ஒருமுறை leak ஆனால்…
லாக்கர் செயலி பயன்படுத்தினால் பாதுகாப்பு கிடைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் அது முழுமையான பாதுகாப்பு அல்ல. சில செயலிகள் கோப்புகளை மறைத்து (hide) வைத்திருக்கும்; சில செயலிகள் குறியாக்கம் (encryption) பயன்படுத்தினாலும், மொபைல் ஹேக் ஆகுதல், காப்புநகல் (backup), அல்லது தகவல் கசிவு (data leak) போன்ற அபாயங்கள் எப்போதும் இருக்கின்றன.
குரோம் (Google Chrome) மூலம் சிறிய குறியீடுகளை (code) பயன்படுத்தி எல்லா லாக்கர் செயலிகளையும் உடைக்க முடியும் என்பது தவறான புரிதல். தற்போதைய மொபைல் பாதுகாப்பு முறைகளால் இது எளிதில் சாத்தியமில்லை.
ஆனால் அதனால் முழு பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்று அர்த்தமில்லை.
காசு கொடுத்து வாங்கிய பாதுகாப்பு செயலி (locker app) இருந்தாலும், மொபைல் திருட்டு போனாலோ அல்லது வேறு யாரிடமோ கிடைத்தாலோ, தரவு மீட்பு மென்பொருட்கள் (data recovery software) போன்ற வழிகளில் சில தகவல்கள் மீண்டும் பெறப்படும் அபாயம் இருக்கிறது.
மேலும், மேக சேமிப்பகம் (cloud storage), வாட்ஸ்அப் (WhatsApp), டெலிக்ராம் (Telegram), (ஸ்னாப்ச்சட்) Snapchat போன்ற தளங்களில் சேமிக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது மனித தவறுகள் காரணமாக வெளியேறும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக திரைப்பிடிப்பு (screenshot), screen recording போன்றவற்றை முழுமையாக தடுக்க முடியாது.
USB போன்ற வெளிப்புற சாதனங்களில் (external storage) சேமித்தாலும் அது முழுமையான பாதுகாப்பு அளிக்காது. அது எவரிடமும் சென்றுவிட்டால், அந்த தரவுகளை அணுகுவது சுலபமாகிவிடும்.
இதன் அர்த்தம் Digital உலகத்தில் “முழு பாதுகாப்பு” என்பது ஒரு மாயை (myth) போன்றதே.
ஒரு முறை ஒரு புகைப்படம் அல்லது காணொளி வெளியேறிவிட்டால், அதை முழுமையாக அழித்துவிடுவது மிகவும் கடினம். யார் அதை சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது.
விழிப்புணர்வே பாதுகாப்பு
ஒரு வேலை புகைப்படமோ காணொளியொ கசிந்து விட்டால், மனஅழுத்தத்தில் விழாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட தளங்களில் புகார் அளியுங்கள்
- cyber crime அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும்
- தேவையானால் சட்ட நடவடிக்கை எடுக்கவும்






Post a Comment