Header Ads

42 ஆண்டுகள் மூடப்பட்ட பெகுன்கோடர் (Begunkodor) ரயில் நிலையம் – இந்தியாவின் பேய் கதை | உண்மை என்ன?

0 நிமிட வாசிப்பு

பெகுன்கோடர் (Begunkodor) ரயில் நிலையம் – அறிமுகம்



42 வருடங்களாக ஒரு இரயில் நிலையம் திறக்கப்படாமல் இருந்தது பற்றி தெரியுமா? காரணம் கேட்டால் பேய் கதை சொல்கிறார்கள். அதுவும் இந்தியாவில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் இடம்.


    இந்த இரயில் நிலையம் முடியதற்கும், 42 வருடங்கள் கழித்து அதை மீண்டும் திறந்ததற்கும் காரணம் 2 பெண்கள். இரண்டு பேருமே வெள்ளை நிற உடைதான் உடுத்துவார்கள். அது பற்றி தெரியுமா?

    

    இன்றளவும் இந்தியாவில் 10 அமானுஷ்யம் நிறைந்த இரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும் இரயில் நிலையம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.


சுதந்திரத்துக்குப் பிறகு உருவான தேவைகள்

    இந்தியா சுதந்திரம் அடைந்தததன் பிறகு, சிறிது சிறிதாக வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. உள்நாட்டு கட்டமைப்பு என்பது மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதில் இரயில் துறையும் ஒன்றாக இருந்தது.

    அது  மேற்கு வங்காளம். மேற்கு வங்காளம்’னு சொன்னதும் நமக்கு ஞாபகம் வருவது அதன் தலைநகரம் கொல்கத்தா. கொல்கத்தாவில் இருந்து ஒரு 260 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது புருலியா.

    புருலியா. சந்தால், பூமிஜ், முண்டாஸ் போன்ற  பழங்குடிகள் அதிகமாக வாழும் ஒரு இடம். அந்த புருலியாவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கும் ஒரு ரயில் நிலையம் தான் பெகுன்கோடர்.

பெகுன்கோடர் ரயில் நிலையம் உருவான கதை

    இவர்களுடைய முக்கியமான தொழில் விவசாயம். அதை சந்தைப்படுத்த போதுமான போக்குவரத்து இவர்களுக்கு இல்லை. இவர்கள் இரயில் ஏற வேண்டும் என்றால் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புருலியாவிற்கு தான் செல்ல வேண்டும். 

    ஆனால் இரயில் தண்டவாளங்கள் இவர்கள் கிராமம் வழியாகத்தான் செல்கிறது.   இதனால் பெகுன்கோடர் மற்றும் அதை சுற்றி உள்ள மக்கள் அரசாங்கத்திற்கு இங்கு இரயில் நிலையம் அமைக்க கோரிக்கையை வைக்கிறார்கள்.

இவர்கள் கோரிக்கையை ஏற்று அங்கு ரயில் நிலையம் அமைக்க ஒப்புதலும் அளித்தது அப்போதைய மத்திய அரசாங்கம். ஆனால் அவர்களுக்கு மிக பெரிய தடையாக இருந்தது போதுமான இடம் அங்கு அரசாங்கத்திற்கு இல்லாதது. இதனால் அந்த பணி தடைபட்டது. 


இதை அறிந்த சந்தால் பழங்குடியினரின் இரணியாக இருந்த லச்சன் குமாரி இரயில் நிலையம் அமைக்க தேவையான மிக பெரிய இடம் வழங்கினார். அது சரியாக 1960 இராணி லச்சன் குமாரியின் உதவியுடன் இரயில் நிலையம் தனது முதல் சேவையை துவங்கியது. நிலைய அதிகாரி (Station master) பயணச்சீட்டு விற்பனை செய்பவர், மக்கள் என மிகுந்த பரபரப்பாக இருந்தது.


ஆரம்ப கால வெற்றியும் வளர்ச்சியும்

    ஆனால் அவர்கள் கனவு ஏழே வருடங்களில் தவிடு பொடியானது. ஆள் நடமாட்டமே இல்லாமல், பார்த்தாலே பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இரயில் நிலையம் மாறியது. அங்கு வாழும் மக்கள் மனதில் மிக பெரிய பயத்தையும் விதைத்தது.
    
    அது இன்றளவும் தொடர்கிறது. 5 மணிக்கு மேல் அங்கு செல்வதை மனதில் நினைக்க கூட மாட்டார்கள் அந்த பகுதி மக்கள். அதற்கான விதை விதைத்து 1967'ல் தான்.

1967 – மர்ம சம்பவத்தின் தொடக்கம்



    இரயில் நிலையம் துவங்கி 7வது வருடம். அது 1967 அந்த இரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், இரவில் அங்கு ஒரு பெண்ணை பார்ப்பதாகவும், அந்த பெண் வெள்ளை நிற உடை அணிந்து வருவதாகவும், ரயில் வரும் திசையில் அந்த பெண் போறாங்க, ரயில் அந்த பெண்ணின் மீது மோதுகிறது.

     இரயில் போனதன் பிறகு அந்த பெண்ணின் சடலத்தை, ஏன் அந்த பெண்ணின் சிறு பாகத்தை கூட பார்க்க முடிவது இல்லை என்று சொல்லி வந்தார்கள் நிலைய அதிகாரியிடம்.

நிலைய அதிகாரி அனுபவம் & பயம்

    அந்த நிலைய அதிகாரி அதை நம்பும் படியாக இல்லை. ஒரு நாள் இரவு 11 மணி. கடிகார மணி 11 முறை ஒலிக்கிறது. எதிர்ச்சியாக வெளிய வந்து பார்க்கிறார். ஒரு நிமிடம் உறைந்து போகிறார். அதே வெள்ளை நிற உடை உடுத்திய பெண் ரயில் வரும் திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அதை கண்ட station master அந்த பெண்ணை நோக்கி ஓடுகிறார். ஆனால் அவர் போவதற்குள் ரயில் அந்த பெண்ணின் மீது மோதுகிறது.


மிரண்டு நிக்கிறார் என்ன செய்வது என்று அறியாது. ரயில் சென்ற பிறகு சடலத்தை பார்த்து விட்டு உதவிக்கு ஆட்களை அழைக்கலாம் என்று நிக்கிறார். ரயில் தனது இறுதி பெட்டியை இழுத்து கொண்டு மறைந்தது. Station master தேடுகிறார், பெண்ணின் சடலத்தை காணவில்லை. உடல் பாகங்கள் எதாவது இருக்கிறதா என்று பயத்துடன் தேடுகிறார். அந்த பெண்ணிற்கான அடையாளம் சிறிது கூட இல்லை.


மரணங்கள் மற்றும் வதந்திகள்:

    பயத்தில் அந்த இடத்தை விட்டு ஓடுகிறார். அங்கு இருக்கும் நபர்களிடம் தான் கண்டதை மிகுந்த படபடப்பாக சொல்கிறார். அந்த பெண்ணை பார்த்த மறுநாள் மர்மமான முறையில் தண்டவாளத்தில் சடலமாக இறந்து கிடக்கிறார்.     அதுமட்டுமல்ல அவர் குடும்பமும் அவருடைய இல்லத்தில் இறந்து கிடந்தார்கள். இந்த செய்தி காட்டு தீ போல் பரவுகிறது. அவருக்கு மாற்றாக வந்த நிலைய அதிகாரிகளும் இதே கதையாய் சொல்கிறார்கள், வேலையை விட்டு நிற்கிறார்கள்.

42 ஆண்டுகள் மூடப்பட்ட Begunkodor நிலையம்

அந்த இரயில் நிலையத்திற்கு புதிதாக ஆட்களை நியமித்தால் எனக்கு வேறு இடத்திற்கு மாற்றி விடுங்கள், இல்லை என்றால் ராஜினாமா கூட செய்து விடுகிறேன், அங்கு வேலை வேண்டாம் என்று பதறினார்கள். அதன் பின் யாரும் வேலை செய்ய முன் வரவில்லை.

    இதனால் அதே வருடம் இரயில்வே துறை இந்த ரயில் நிலையத்தை அமானுஷ்யம் இடமாக அறிவிக்கிறது. அதன் பிறகு கிட்டத்தட்ட 42 வருடங்களாக பயன்பாட்டில் இல்லாமல் மூடி இருந்தது.

     இரவில் அங்கு பயப்படுத்தும் சத்தங்கள் கேட்கும். அந்த இரயில் நிலையத்தை கடக்கும் இரயில்கள் கூட மிகுந்த வேகத்தில் தான் கடக்கும். உள்ளிருக்கும் பயணிகள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடுவார்கள் இந்த ரயில் நிலையத்தை பற்றி தெரிந்தவர்கள். அந்த அளவு பயத்தை ஆட்கொண்டிருந்தது அந்த இரயில் நிலையம். 

2009 – மீண்டும் திறக்கப்பட்ட ரயில் நிலையம்

    ஆட்கள் இல்லாமல், 42 வருடங்களாக பாழடைந்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் ஏன் அந்த பகுதிக்கே செல்லாமல் இருந்த ரயில் நிலையம் 2009’ம் ஆண்டு அதே வெள்ளை நிற உடை உடுத்திய மம்தா பானர்ஜி அவர்களால் மீண்டும் திறந்து வைக்கப்படுகிறது.     ஆனால் இன்றளவும் இந்த இரயில் நிலையம் மாலையில் இயங்குவது கிடையாது. அதிகாலையில் துவங்கும் இரயில் நிலையம் மாலை 5 மணிக்கு எல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாமல் பயப்படுத்தும் இடமாக மாறிவிடும்.

உண்மை என்ன? மர்மமா அல்லது மனித காரணமா?

தற்பொழுது இந்த ரயில் நிலையம் அமானுஸ்யத்தை விரும்பும் நபர்கள் ஈர்க்கும் (Ghost tourism) இடமாக மாறிவிட்டது. பயத்தை திகிலை விரும்ப கூடிய நபர்கள் அந்த இடத்திற்கு வருகிறார்கள். இடையில் இங்கு பேய் இல்லை என்று நிறுபிக்க அங்கு ஒரு நாள் முழுவதும் தங்கி ஆராய்ந்து உள்ளனர். ஆனால் அது போன்ற சம்பவம் எதுவும் அவர்களுக்கு நடக்கவில்லை. 


மாறாக ஒரு புதரில்  இருந்த சப்தம் வந்திருக்கிறது. அங்கு அவர்கள் செல்லும் பொழுது புதரில் தங்கி இருந்த  மனிதர்கள் ஓடிவிட்டார்கள் என்றும் இங்கு பேய் அமானுஷ்யம் இல்லை என்றும் ஒரு காணொளி வெளியிட்டார்கள். இருந்தும் இன்றளவும் அங்கு 5 மணிக்கு மேல் ஆட்கள் வருவதை இல்லை. 


அங்கு பேய் இருக்கிறதா? அமானுஷ்யம் இருக்கிறதா? இல்லை இரவு வேலையில் சட்டவிரோதமாக செயல் செய்ய அங்கு இருக்கும் மக்கள் இதை நம்பவைத்து கொண்டு இருக்கிறார்களா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். 


இது போன்று வேறு ஒரு அமானுஸ்ய பதிவில் சிந்திப்போம்.

    

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.