What Is G20?
1997-98 ஆசியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு 1999 இல் G20 என்ற முறைசாரா மன்றம் அமைக்கபட்டது, இது மிகவும் முக்கியமான தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் வளரும் பொருளாதார நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கு பெரும் ஒன்றாக இருந்தது. இதில் சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிலைத்தன்மை பற்றி விவாதங்கள் நடைபெறும். G20 பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
உலகம் முழுவதும் உள்ள வணிக வளர்ச்சிக்கு G20ன் பங்கு என்ன?
பொருளாதாரக் கொள்கையை ஒருங்கிணைப்பது (Economic Policy Coordination): G20 நாடுகள் பொருளாதாரக் கொள்கைகளை பற்றி விவாதிக்கவும் அதை ஒருங்கிணைக்கவும் அடிக்கடி கூட்டங்களை கூட்டும். அதில் பேசப்படும் விவாதங்களால் உலகளாவிய பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அதே சமயம் அதை ஊக்குவிக்கும் புதிய கொள்கைகள் என்ன என்பதை கேட்க வழிவகுக்கும் ஒரு இடமாக இருக்கிறது. இது வணிக வளர்ச்சிக்கு அவசியம். எடுத்துக்காட்டாக, ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் நாணய மாற்று விகிதங்களை உறுதிப்படுத்தி, நிதி நெருக்கடிகளின் நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதன் மூலம் வணிகங்களுக்கு பயனளிக்கிறது.
வர்த்தகம் (Trade): G20 உறுப்பினர்கள் உலகளாவிய வர்த்தகத்தின் 75% வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் இந்த G20 மன்றம் வழியாக ஏற்படும் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதாவது G20 க்குள் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மூலமாக மற்ற நாடுகளில் உள்ள வர்த்தக தடைகளை குறைப்பது மற்றும் வர்த்தகத்தை உறுதிப்படுத்துதல் போன்றவை நிகழும். இதன் மூலம் புதிய சந்தைகளில் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
ஒழுங்குமுறை தரநிலைகள் (Regulatory Standards): G20 மன்றத்தில் உள்ள அனைத்து நாடுகள் முழுவதும் ஒரே ஒழுங்குமுறை தரநிலைகளை கொண்டுவர ஊக்குவிக்க முடியும். பல்வேறு சந்தைகளில் உள்ள பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு வணிகம் செய்யும் சிக்கலைக் குறைப்பதன் மூலம் வணிகம் எளிமையாக முடியும். அது மட்டுமல்ல சர்வதேச அளவில் ஒன்றிணைந்து செயல்படுவதை எளிதாக்குகிறது.
| Example |
முதலீடு (Investment): G20 விவாதங்களில் பெரும்பாலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடு தொடர்பான தலைப்புகளும் அடங்கும். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் கொள்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு அல்லது சீர்திருத்தங்கள் போன்றவை, புதிதாக வேறு ஒரு நாட்டில் வணிகங்கள் செழிக்க மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகிறது.
நிதி நிலைத்தன்மை (Financial Stability): G20 நிதி நிலைத்தன்மையை பற்றிய பிரச்சினையை எடுத்துரைக்கிறது. இது நிலையான நிதிச் சந்தைகளை நம்பியிருக்கும் வணிகங்களுக்கு மிக முக்கியமானது. நிதி நெருக்கடிகளைத் தடுப்பதற்கும், வங்கி அமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் வணிக வளர்ச்சியை மறைமுகமாக ஆதரிக்கிறது.
பருவநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை (Climate Change and Sustainability): சமீப காலமாக G20 நாடுகள் சுற்றுச்சூழல் மற்றும் அதன் நிலைத்தன்மை பற்றிய பிரச்சனைகளை விவாதித்து வருகிறது. காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான முடிவுகளினால் ஒரு சில வணிக நடைமுறைகள் பாதிக்கும். அதே சமயம் பசுமைத் தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு புதியதாக வாய்ப்புகளை உருவாக்கும்.
தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் (Technology and Innovation): G20 பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடுப்புகளின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளது. அது தொடர்பான விவாதங்களில் ஈடுபடுவதன் மூலம் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பு சம்மந்தமான கொள்கைகள், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய துறைகளில் வணிகங்களை அடுத்த கட்டத்திற்க்கு முன்னேற்றுகிறது.
உள்கட்டமைப்பு முதலீடு (Infrastructure Investment): G20 பெரும்பாலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட முடியும் என்பதால் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துகிறது. போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் இணைப்பு போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் செலவுகள் குறையும், செயல்திறன் அதிகரிக்கும். இதன் மூலமும் வணிகங்களுக்கும் பெருகும்.
வளங்களுக்கான அணுகல் (Access to Resources): பல வணிகங்களுக்கு ஒரு சில முக்கியமான ஆற்றல் மற்றும் மூலப்பொருட்கள் போன்றவை தேவைப்படும். இந்த வளங்கள் அந்த வணிக நிறுவனம் உள்ள நாட்டில் இல்லாமல் வேறு ஒரு நாட்டில் இருந்தால் அதை எளிதாக அணுக அல்லது அதை வாங்க முடியாது. இதை தவிர்க்க வளங்களுக்கான அணுகலை மேம்படுத்தும் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை G20 செய்ய எளிதாக மாற்றும்.
நெருக்கடி மேலாண்மை (Crisis Management): நெருக்கடி காலங்களில், G20 ஆனது வணிகங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தைத் தணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கடுமையான பொருளாதாரச் சரிவுகளைத் தடுக்க உதவுகிறது.
இது வணிக ரிதியாக மட்டுமே G20யால் மேற்கொள்ளப்படும் ஒரு சில விஷயங்களுக்கான எடுத்துக்காட்டு மட்டுமே. இது போக இன்னும் பல விஷயங்கள் G20யால் செய்ய இயலும். அதே சமயம் G20 நாடுகளும் G20யால் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கு உடன்பட்டு நடக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இந்த கொள்கை முடிவுகளால் தான் நம் நாட்டில் ஒரு சில இடங்களில் பல எதிர்ப்புகள் இருந்த போதும், அதை நிறுத்த முடியாமல் செயல்படுத்துகிறது. பல எதிர்ப்புகளுக்கு அரசியல் காரணங்களும் உண்டு என்பதை தவிர்க்க இயலாது.
மீண்டும் அடுத்த பதிவில் வேறு ஒரு தகவலை பார்க்கலாம்.

0 கருத்துகள்