Header Ads

From Crisis to Cooperation: How G20 Nations Come Together to Shape the Future

 What Is G20?



1997-98 ஆசியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு 1999 இல் G20 என்ற முறைசாரா மன்றம் அமைக்கபட்டது, இது மிகவும் முக்கியமான தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் வளரும் பொருளாதார நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கு பெரும் ஒன்றாக இருந்தது. இதில் சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிலைத்தன்மை பற்றி விவாதங்கள் நடைபெறும். 

G20 அதாவது 20 நாடுகளின் ஒரு குழு. G20 நாடுகள் (G20 countries) பின்வருவன 

1. அர்ஜென்டினா (Argentina) 2. ஆஸ்திரேலியா (Australia)

3.  பிரேசில் (Brazil) 4.  கனடா (Canada)

5.  சீனா (China) 6.  பிரான்ஸ் (France)

7. ஜெர்மனி (Germany) 8. இந்தியா (India)

9. இந்தோனேசியா (Indonesia) 10.  இத்தாலி (Italy)

11. ஜப்பான் (Japan) 12. கொரியா குடியரசு (Republic of Korea)

13. மெக்சிகோ (Mexico) 14. ரஷ்யா (Russia)

15.  சவுதி அரேபியா (Saudi Arabia) 16. தென்னாப்பிரிக்கா (South Africa)

17. துருக்கி (Türkiye) 18. ஐக்கிய பேரரசு (United Kingdom)  

19.அமெரிக்கா (United States) மற்றும் 20. ஐரோப்பிய ஒன்றியம் (European Union) 

போன்ற நாடுகள் உள்ளன. 


 உங்களுக்கு தெரியுமா?

G20 உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.


G20 என்பது சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பிற்கான முதன்மை மன்றம் (Premier Forum For International Economic Cooperation). இது அனைத்து முக்கிய சர்வதேச பொருளாதார பிரச்சனைகளை நிர்வகிப்பதிலும், உலகளவில் உள்ள நபர்களை ஒன்றிணைத்து கட்டமைத்து உலகை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. G20 அமைப்பிற்கு என்று நிரந்தர செயலகம் அல்லது பணியாளர்கள் இல்லை. அதற்கு பதிலாக, G20 தலைவர் (G20 leader) பதவி உறுப்பினர்களிடையே ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படியில் மற்றும் நாடுகளின் வெவ்வேறு பிராந்திய குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.

இந்த 19 உறுப்பு நாடுகள் அதிகபட்சம் நான்கு நாடுகளை உள்ளடக்கிய ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான குழுக்கள் நிலப்பரப்பு அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன, அதாவது ஒரே நிலப்பரப்பை சேர்ந்த நாடுகள் பொதுவாக ஒரே குழுவில் வைக்கப்படுகின்றன. 

அதில் குழு 1 (ஆஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா) மற்றும் குழு  2 (இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் துருக்கி) நிலப்பரப்பு அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. 

குழு 3’ல் அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் மெக்சிகோவும், குழு 4’ல் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐக்கிய பேரரசுவும் குழு 5’ல் சீனா, இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகியவை இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் வேறு வேறு குழுவில் இருக்கும் ஒரு நாடு G20 தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறது. ஒரு குழுவில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் குழுவின் முறை வரும்போது தலைவர் பதவியேற்க உரிமை உண்டு.

தற்பொழுது இந்தியா அதாவது குழு 2 இலிருந்து, G20 இன் தற்போதைய தலைமைப் பதவியை 1 டிசம்பர் 2022 முதல் 30 நவம்பர் 2023 வரை வகிக்கிறது. இது G20 தலைவர் மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, உலகப் பொருளாதாரத்தின் முன்னேற்றங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் G20 நிகழ்ச்சி நிரலை ஒன்றிணைக்கும் ஒரு பொறுப்பாகும். இதன் தொடர்ச்சியை உறுதிப்படுத்த, தற்போதைய, கடந்த மற்றும் அடுத்த நாடுகளால் உருவாக்கப்பட்ட "முக்கூட்டு நாடுகளின்" (troika) மூலம் தலைவர் பதவிக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.


G20 அமைப்பு (G20 STRUCTURE): 

ஷெர்பா தடம் (Sherpa Track): 

இது தற்போதைய தலைவரின் தலைமையின் கீழ் நடக்கும். இது சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தும். அதாவது,

  1. விவசாயம் (Agriculture)

  2. ஊழல் எதிர்ப்பு (Anti-Corruption)

  3. காலநிலை (Climate)

  4. டிஜிட்டல் பொருளாதாரம் (Digital Economy), 

  5. கல்வி (Education)

  6. வேலைவாய்ப்பு (Employment), 

  7. ஆற்றல் (Energy)

  8. சுற்றுச்சூழல் (Environment), 

  9. சுகாதாரம் (Health)

  10. சுற்றுலா (Tourism),

  11. வர்த்தகம் மற்றும் முதலீடு (Trade and investment).


இந்தப் தடத்தின் கீழ் செயல்படும் குழுக்கள்:

  1. விவசாய பணிக்குழு (Agriculture Working Group)

  2. ஊழல் எதிர்ப்பு பணிக்குழு (Anti-corruption Working Group)

  3. கலாச்சார பணிக்குழு (Culture Working Group)

  4. வளர்ச்சி பணிக்குழு (Development Working Group)

  5. டிஜிட்டல் பொருளாதார பணிக்குழு (Digital Economy Working Group)

  6. பேரிடர் இடர் குறைப்பு பணிக்குழு (Disaster Risk Reduction Working Group)

  7. கல்வி பணிக்குழு (Education Working Group)

  8. வேலைவாய்ப்பு பணிக்குழு (Employment Working Group)

  9. ஆற்றல் மாற்றங்கள் பணிக்குழு (Energy Transitions Working Group)

  10. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு (Environment and Climate Sustainability Working Group)

  11. சுகாதார பணிக்குழு (Health Working Group)

  12. சுற்றுலா பணிக்குழு (Tourism Working Group)

  13. வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழு (Trade and Investment Working Group)

நிதி தடம் (Finance Track):

இது நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களால் தலைமையில் பொதுவாக வருடத்திற்கு நான்கு முறை கூடும் கூட்டம். இது உலக வங்கியின் (World Bank) கீழ் இரண்டும், சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) கீழ் இரண்டும் என நான்கு கூட்டம்.

நிதி மற்றும் பணவியல் கொள்கை சிக்கல்கள் போன்றவைகளில் இது கவனம் செலுத்தும். அதாவது 

  1. உலகளாவிய பொருளாதாரம் (Global Economy)

  2. உள்கட்டமைப்பு (Infrastructure)

  3. நிதி கட்டுப்பாடு (Financial Regulation)

  4. நிதி உள்ளடக்கம் (Financial Inclusion)

  5. சர்வதேச நிதி கட்டமைப்பு (International Financial Architecture)

  6. சர்வதேச வரிவிதிப்பு (International Taxation)

இந்தப் தடத்தின் கீழ் செயல்படும் குழுக்கள்:

  1. கட்டமைப்பு பணிக்குழு (Framework Working Group)

  2. சர்வதேச நிதிக் கட்டிடக்கலை பணிக்குழு (International Financial Architecture Working Group)

  3. உள்கட்டமைப்பு பணிக்குழு (Infrastructure Working Group)

  4. நிலையான நிதி பணிக்குழு (Sustainable Finance Working Group)

  5. நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மை (Global Partnership for Financial Inclusion)

  6. கூட்டு நிதி மற்றும் சுகாதார பணிக்குழு (Joint Finance and Health Task Force)

  7. சர்வதேச வரிவிதிப்பு சிக்கல்கள் (International taxation Issues)

  8. நிதித் துறை சிக்கல்கள் (Financial Sector Issues)

முன்முயற்சிகள் (Initiatives):

ஷெர்பா தட பணிக்குழுக்கள் தவிர ஆராய்ச்சி மற்றும் புதுமை முயற்சி சேகரிப்பு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முன்முயற்சி சேகரிப்பு Research and Innovation Initiative Gathering (RIIG) என்ற ஒரு அமைப்பு G20 உறுப்பு நாடுகளிடையே ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், தீவிரப்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இது வெறும் G20ஐ பற்றிய துவக்கம் மட்டுமே, 20 ஒரு ஒரு நாடுகளுக்கும் ஒரு மிக பெரிய முன்னேற்றத்தை அளித்துள்ளது. அது எவ்வாறு என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம். இந்த பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பதிவிடவும்.

                நன்றி         வணக்கம்


Keywords: G20 summit, G20 countries, G20 leaders, G20 meetings, G20 agenda, G20 finance, G20 economy, G20 cooperation, G20 politics, G20 trade, G20 global governance, G20 international relations, G20 decision-making, G20 initiatives, G20 development, G20 sustainability, G20 foreign policy, G20 economic growth, G20 financial stability, G20 trade relations, G20 climate change, G20 geopolitical issues, G20 diplomatic efforts, G20 policy coordination, G20 multilateral cooperation.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.