கோவை பற்றி தெரியாத அதிர்ச்சி உண்மைகள் | Coimbatore History in Tamil
நொய்யல் கரையில் பிறந்த நகரம் – கோயம்புத்தூர்
நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் அழகிய நகரம் கோயம்புத்தூர். இது சேர, சோழ, பாண்டிய என மூவேந்தர்களும் ஆண்ட பகுதி. அதுமட்டுமல்ல, சோழர்களின் பிறப்பிடமாக (பொது நூற்றாண்டு 1 முதல் 4 வரை) திகழ்ந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. இது மட்டும்தான் பெருமையா?
பேரூர் பட்டீசுவரர் கோவில் – கோவையின் அடையாளம்:
தமிழ்நாட்டின் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றான பேரூர் பட்டீசுவரர் கோவில், கரிகால சோழனால் பொது நூற்றாண்டு 2ல் கட்டப்பட்டது. இந்த கோவில் கோயம்புத்தூரில் மையத்தில் அமைந்துள்ளது என்பது கூடுதல் பெருமை.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்:
கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்படுகிறது. தொழில்துறை வளர்ச்சி, குறிப்பாக நெசவு மற்றும் இயந்திர உற்பத்தியில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களிலும் கோவை எப்போதும் முன்னிலையில் உள்ளது.
கொங்கு தமிழ் & ஆரம்ப வரலாறு:
தமிழ்நாட்டின் முக்கிய பேச்சுவழக்குகளில் ஒன்றான கொங்கு தமிழ் பேசப்படும் பகுதி இது. 9ஆம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரன் பெருமாள் மூலம் நகர அமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இதன் வரலாறு சங்க காலத்திற்கே செல்லுகிறது.
அந்த காலத்தில் வாழ்ந்த பழங்குடியினரில் முக்கியமானவர்கள் கோசர்கள்.
அவர்களின் தலைநகரமான “கொசம்பத்தூர்” என்பதிலிருந்து “கோயம்புத்தூர்” உருவாகியிருக்கலாம் என்பது வரலாறு
சோழர்களின் பெருவழிகள் & வாணிபம்:
சோழர் காலத்தில் கோங்கு பகுதியில் 20க்கும் மேற்பட்ட “பெருவழிகள்” இருந்தன. அதில் முக்கியமானது: இராஜகேசரி பெருவழி
இது சோழ நாட்டையும் சேர நாட்டையும் (இன்றைய கேரளா) இணைத்தது. இந்த பாதை வழியாக ரோமானியர்கள், கிரேக்கர்கள் தமிழகத்துடன் வாணிபம் செய்தனர்
பல அரசுகளின் ஆட்சி:
கோவை பகுதி கீழ்கண்ட அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது:
ராஷ்டிரகூடர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், மதுரை நாயக்கர்கள், விஜயநகர பேரரசு, பின்னர் 1799ல் திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1947 வரை அவர்கள் ஆட்சி செய்தனர்.
ஆன்மிக முக்கியத்துவம்:
9ம் நூற்றாண்டில் நான்கு நாயன்மார்களில் ஒருவரான சுந்தர நாயனார் பேரூர் கோவிலில் தேவாரம் பாடி உள்ளார் எனவும் 12ம் நூற்றாண்டில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலையில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
| அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
கோவையின் முக்கிய சாதனைகள்:
வரலாற்று நிகழ்வுகள்: இரண்டாம் பாளையக்காரப் போரில் கோவை முக்கிய பங்கு வகித்தது.
தொடர்வண்டி சேவை வரலாறு: 1862ம் ஆண்டு தென்னக ரயில் பகுதில் கட்டப்பட்ட மிக பழமையான ஒரு ரயில் நிலையம் என்ற பெருமை போத்தனூர் ரயில் நிலையத்திற்கே சேரும். இந்த ரயில் நிலையம் திறக்கப்பட்டு 9 ஆண்டுகள் கழித்தே சென்னை மத்திய ரயில் நிலையம் துவங்கப்பட்டது.
| போத்தனூர் இரயில் நிலையம் |
வேளாண்மை: 1912 கரும்பு வளர்ப்பு நிறுவனம், வேளாண் துறையால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய கரும்பு வகைகள் இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த கரும்புப் பரப்பில் 90% க்கும் அதிகமானவை.
சினிமா: 1914ல் சாமிகண்ணு வின்சென்ட் என்பவர் தென்னிந்தியாவில் முதல் திரையரங்கனா “Variety Hall Talkies” துவங்கப்பட்டது. தற்பொழுது “Delite theatre” என்றழைக்கப்படுகிறது.
நீர் வளம்: ரத்தினசபாபதி முதலியாரால் 1929ம் ஆண்டு உலகின் இரண்டாவது இனிமையான நீரான சிறுவாணி தண்ணீர் கோவையை வந்தடைந்தது.
கல்வி: கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் கல்வி மையமாகும். இங்கு 7 பல்கலைக்கழகங்கள், 78 பொறியியல் கல்லூரிகள், 3 மருத்துவக் கல்லூரிகள், 2 பல் மருத்துவக் கல்லூரிகள், 35 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 150 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் G.D. நாயுடு இங்கு பிறந்தவர்.
அதுமட்டுமல்ல நமது தேசிய கீதமான ஜன கண மண பாடல் பள்ளியளவில் முதன் முதலாக PSG சர்வஜன என்ற கல்வி நிறுவனத்தில் பாடப்பட்டது. இதுவும் கோவையில் உள்ளது என்பது சிறப்பு.
தொழில்துறை வளர்ச்சி: தமிழகத்தின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் அளவுக்கு ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறது கோவை.
உலக அரங்கில் கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 கோவையில் நடைபெற்றது.
கொங்குநாடு என அதன் தாழ்மையான தொடக்கத்திலிருந்து நவீன தொழில்துறை மையமாக அதன் தற்போதைய நிலை வரை, கோவையின் பரிணாமம் குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூர் அதன் வேர்களையும் பாரம்பரியத்தையும் போற்றும் அதே வேளையில், முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து நிற்கிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த வரலாறு என்பது நிகழ்வுகளின் பதிவு மட்டுமல்ல, நம் உலகத்தை வடிவமைக்கும் ஒரு உயிருள்ள, சுவாச அமைப்பு என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
Post a Comment