Hello and welcome to Tamil Decodes. எதிர்பாராமல் இந்த வலைப்பக்கம் (website) பார்த்து வந்தாலும் சரி அல்லது எதாவது ஒரு விஷயம் கற்றுக்கொள்ள நினைத்து அந்த தேடலில் இந்த வலைப்பக்கம் (website) வந்து அதன் வழியாக வந்தாலும் சரி என்னோட இந்த பயணத்தில் உங்களையும் சேர்த்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த பக்கத்தில் என்னவெல்லாம் பார்க்க போகிறோம் என்பதை பார்ப்போம்.
நாம் கேட்கும் ஒவ்வொரு கதையும் உண்மை தானா? (Is Every Story We've Heard True?)
நம்மை சுற்றி கதைகள் நிறைய வலம்வந்து கொண்டுதான் இருக்கிறது. எப்பொழுதாவது அந்த கதைகள் அனைத்தும் உண்மைதானா என்று சிந்தித்து உண்டா? அது வரலாறு புத்தகமாகட்டும், செய்தி தாள்களாகட்டும் அல்லது நம்மை சுற்றியுள்ள நபர்கள் சொல்லுவதாகட்டும். ஒருவேளை அந்த கதைகளையும் தாண்டிய உண்மை இருந்தால்?
எந்த கதை எடுத்தாலும் அதற்கு இரண்டு பக்கம் கண்டிப்பாக இருக்கும். நாணயத்திற்கு இருக்கும் இரு பக்கம் போல. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல. ஆனால் நாம் பார்க்கும் கதைகள் அனைத்தும் ஒரு சார்பாகவே இருக்கும். அது அன்றைய வரலாறு ஆகட்டும் இன்றைய நிகழ்வாகட்டும். ஏன்?
நாம் படித்த வரலாறு அனைத்துமே உண்மைதானா? அப்படி இருக்கையில் ஏன் ஒரு ஒரு புத்தகத்திலும் வேறு மாதிரியாக இருக்கிறது? ஏன் ஒரு சில உண்மைகளை தெரிந்து கொள்ள விடாமல் மறைக்கிறார்கள்? (Why are some hidden truth) அல்லது திசை திருப்ப முயல்கிறார்கள்?
Yes யாரும் சொல்லாத பல விஷயங்கள், நம்ம கொஞ்சம் ஆழமா பக்க போறோம். யாருமே தொடாத இல்ல இல்ல பெரிய பெரிய நபர்கள் கண்களுக்கு தெரியாத அல்லது சொல்லாத விஷயங்களை பார்க்க போகிறோம்.
Every action has an equal and opposite reaction right. கடினமாக மறைக்க நினைக்கும் சின்ன விஷயத்தின் தாக்கம் அதிகமா மாறி கொண்டே போகும் right. சிறிய விஷயம் முதல் பெரிய நிகழ்வு வரை தேடுவோம். மறைந்திருக்கும் உண்மையை வெளிக்கொணர்வோம்.
அது பழங்கால வரலாறாக இருந்தாலும் சரி தற்பொழுது நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் சரி. எப்பொழுதும் ஒரு பக்க நியாயம் சரி ஆகாது. தேடுவோம் நம்முடைய வரலாறு கலாச்சாரம் அதில் புதைந்துள்ள உண்மை என தேடுவோம். நாம் தெரிந்து கொள்ளும் அனைத்துமே நம்முடைய வாழ்க்கையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது கட்டாயம் நாம் பாட புத்தகத்தில் படித்த அல்லது தொலைக்காட்சியில் பார்த்த செய்தியாக இருக்காது. ஆனால் கட்டாயம் யாராவது ஒருவருடைய வாழ்வில் எதாவது ஒரு மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். நாம் இந்த உலகை பார்க்கும் பார்வை மாறும்.
ஒருவருடைய மாற்றம் என்றுமே மிக வலிமையானது. மாற வேண்டியது சமூகம் அல்ல, தனிநபர் தான். விழிப்போம் நல்ல சமுதாயத்தை நாம் முன்னின்று கட்டமைப்போம்.

0 கருத்துகள்