From Pahalgam to Precision Strikes: How India Responds to Terror, Not With War but Justice

காசுமீர் பகல்காம் (Kashmir Pahalgam):

        22 ஏப்ரல் 2025 அமைதியாக இருந்த காஸ்மீரில் மரண ஓலம் கேட்டது. ஒரு சிலருக்கு மறதி அதிகம் ஆகிருச்சுனு நினைக்கிறன். சுற்றுலாவிற்கு சென்ற 26 அப்பாவி நபர்களை கொன்று குவித்தது TRF (DDNews). மறந்து இருந்தால் ஞாபகம் படுத்தி கொள்ளுங்கள். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு சிந்தூர் நடவடிக்கை (Operation Sindoor) வழியாக பதில் தாக்குதல் என்பது நடத்தப்பட்டது. நாடே மிக பெரிய அளவில் கொண்டாடியது. ஆனால் ஒரு சில நபர்கள் இது தீவிரவாதிகள் மேல் நடந்த தாக்குதல் என்பதை மறந்து, இது ஒரு போர், போர் வந்த என்ன ஆகும் தெரியுமா? No war peace! என்ற பதிவு பார்க்க முடிந்தது அந்த சில நபர்களுக்கு இந்த பதிவு.



    
            இது தமிழ் Decodes வழங்கும் The Unforgettable Massacre


பகல்காம் தாக்குதல் (Pahalgam Attack):

       பஹல்கம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அனைவரும் கேட்ட ஒரு விஷயம் எவ்வாறு இந்த தாக்குதல் நடந்தது. ஏன் இராணுவ வீரர்கள் இல்லை, பாதுகாப்பு இல்லை. உளவு பிரிவு தோல்வி. ஆமாம் இந்த கேள்விகள் நியமானது. அது கூட சேர்ந்து அனைவரும் கேட்ட ஒரு விஷயம் நீதி. 26 அப்பாவி உயிர்க்கான நீதி.


மதத்தின் மீது தாக்குதல் (Attack Based On Religion):

       உன்னுடைய மதம் என்ன என்று கேட்டு கொலை என்பது செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான சாட்சிகள், நேரில் பார்த்த சாட்சிகள் அதுவும் அந்த தாக்குதலில் உயிர் இழந்த நபர்களுடைய உறவினர்கள், குழந்தைகள், மனைவி சொல்லியும், அய்யய்யோ அங்க அப்படி நடக்கல, வந்தான் சுட்டான் கிளம்பிட்டான் என்று கூறும் நபர்களை பார்த்திருப்போம். அசாமில் அமினுல் இஸ்லாம் என்ற சட்டமன்ற உறுப்பினர் (MLA) கூட கைது செய்யப்பட்டார்.



இதிலும் அரசியல் (The politics of attack):

          தாக்குதலில் என்ன நடந்ததோ அதை ஒப்பு கொள்ள மனமில்லாமல், இது இஸ்லாமியர்களுக்கு எதிராக மத அரசியல் செய்கிறர்கள். அங்கு மதம் கேட்டு கொள்ளவில்லை என்று சிலர் பேசி கேட்டிருப்போம். இந்தியாவில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் நண்பர்கள், சகோதரர்கள் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே போல் அங்கு மதம் கேட்டு தாக்குதல் நடந்தது என்பதும் உண்மை. அதை செய்தது பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள். அதை ஒப்புக்கொள்ள ஏன் மனமில்லை? இது தேசத்திற்கும், வருங்கால இளைய தலைமுறையினரின் தேசப்பற்றிற்கும் மிகுந்த ஆபத்து. தற்பொழுது தேச பற்று குறைந்து வருவது பார்க்க முடிகிறது இது போன்ற சில அரசியல் பேச்சினால்.
        
           TRF லஷ்கர்-இ-தொய்பா-வின் கிளை அமைப்பு இதற்கு பொறுப்பேற்ற பிறகும் ஆளும் கட்சியை கை நீட்டுவது, நமது இராணுவ வீரர்கள் மேல் பலி போடுவது எந்த அளவு காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. மோடி என்ற நபரை பிடிக்கவில்லை என்றால் அது தனிப்பட்ட விருப்பம், நமது நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அதை கட்டுவது என்பது மிகவும் அருவருக்கதக்க விஷயம் வேறு ஒன்றும் இல்லை.
    
        தற்பொழுது இந்த அளவு தொழில்நுட்பம் இருந்தும், அத்துணை ஆதாரங்கள் இருந்தும் அது நடக்கவில்லை என்று கூறுகிறார்களே, ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் நடந்ததை எந்த அளவு மாற்றி இருப்பார்கள்? தொலைக்காட்சி வழியாக, செய்தி தாள்கள் வழியாக, பேசாளர்கள் வழியாக!
        
        இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரவில்லை, வாயில் தான் வடை சுடுவார்கள் என்று பேசிய அதே நபர்கள், இன்று தீவிரவாத நபர்களுக்கு எதிராக 9 இடத்தில் துல்லிய தாக்குதல் நடத்திய பிறகு சொல்வது, போர் வேண்டாம், போர் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?
    
        இங்க யார் இது ஒரு போர் என்று சொன்னது. இந்திய இராணுவமோ? இந்திய அரசாங்கமோ ஒரு அறிக்கை வெளி விட்டார்களா இது போர் என்று! இது போன்று தாக்குதலை ஒரு நாடு செய்தால் அதை பார்த்து விட்டு சும்மா இருப்பார்களா பாகிஸ்தானை ஆதரிக்கும் நாடுகள்? நாம் தாக்கிய இடத்திற்க்கான காரணம், அங்கு தீவிரவாதிகள் முகாம் இருந்ததற்கான ஆதாரம் எல்லாம் குடுக்கப்பட்டு உள்ளது. ஏதாவது சிறிய தவறு இருந்தாலும் உலக நாடுகள் சும்மா விடுமா? இரான், வடக்கு கொரியா, சிரியா, வெனிசுவேலா, சூடான் மீது பொருளாதார தடை போடப்பட்டுள்ளது. காரணம் மனித உரிமை மீறல்கள்.

தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் (Attack on Terrorism):

       இது தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று உலக நாடுகளுக்கு தெரியும். உலகில் உள்ள முக்கிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் கூட இந்தியாவுக்கு ஆதரவு தானே தெரிவித்து உள்ளார்கள். தீவிரவாதத்திற்கு ஆதரவாக எந்த நாடும் துணை நிற்காது. ஆனால் தீவிரவாத தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினால் அய்யய்யோ பாவம், அப்பாவி மக்கள் இறக்கிறார்கள்.

    
        இங்கு கொல்லப்பட்ட தீவிரவாத குழுக்கள் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா TRF. இவர்களால் உலகம் முழுவதும் 8000கும் மேற்பட்ட அப்பாவி நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 5000கும் மேல் இறந்து இருக்கிறார்கள். இன்றைக்கு ஒரு பதிவு பார்த்தேன் தீவிரவாதிகளும் மனிதர்கள் தான், அவர்களும் உயிர் தான்’னு ஒரு பதிவு. பல உயிர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்த தீவிரவாதிகள் பாவமாம்.      இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது’வின் என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய நபரான மௌலானா மசூத் அசாரின் உறவினர்கள் கூட்டாளிகள் இறந்திருக்கினார்கள் என்ற அறிக்கை வெளி வந்ததே. அங்கு இறந்தவர்கள் சாதாரண மக்களாக இருந்திருந்தால் புகைப்படம் வெளி வந்திருக்குமே. இது சமூக ஊடக காலம்.         ஆனாலும் அங்கு இறந்தவர்களின் புகைப்படம் ஏன் அந்த கட்டிடம் பக்கத்தில் கூட விடவில்லையே அங்கிருக்கும் இராணுவம். ஒரு வேளை புகைப்படம் வெளிவந்தால், தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவது தெரிந்து விடும் என்று பயந்து வெளியிடவில்லையா? ஏன் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் 30 வருடங்களாக தீவிரவாத குழுக்களுக்கு நீதி உதவி, பயிற்சி அளித்துள்ளோம் என்று Sky news’ல சொன்னாரே.

 அரசியல் செயற்பாட்டுத் திட்டம் (Agenda In Politics):


        ஒரு தீவிரவாத குழு, பாகிஸ்தானில் இருந்து வந்து 26 அப்பாவி மக்களை சுட்டது தப்பில்லை, ஆனால் அதற்கு எதிராக தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மேல் தாக்குதல் நடத்தியது தவறு. இது போர் இல்லை. இது தீவிரவாத தாக்குதலுக்கு அளித்த பதிலடி. இந்திய மக்களும் போர் என்ற ஒன்றை விரும்பவில்லை.         ஒரு நாடு நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை பார்த்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. அப்படி பார்த்தால் மீண்டும் மீண்டும் இதை விட கொடூரமான தாக்குதலை செய்ய தயங்க மாட்டார்கள் தீவிரவாதிகள்.         மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது அதை ஏன் கட்டுப்படுத்தவில்லை என்று அடுத்த கேள்வி வரும். அதை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசு மத்திய அரசு அல்ல. மாநில அரசு தவறும் பட்சத்தில் மத்திய அரசு தலையிடும் இங்கு ஆயுதப்படைகளை நிலைநிறுத்தி உயர் மட்டக் கூட்டங்களை நடத்தியது. அது தனி. இது உள்ளூர் பிரச்சனை.         நமது நாட்டிற்கு சம்மந்தம் இல்லாத ஒரு நபர் வந்து நமது நாட்டு மக்களை, நமது நாட்டின் அமைதியை சீர் குலைக்கும் விதமாக தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதில் தாக்குதல் நடத்த எல்லா நாட்டிற்கும் அதிகாரம் இருக்கிறது.         இங்கு இந்தியா போர் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் துல்லிய தாக்குதல் என்பது நடத்தி இருக்க தேவை இல்லையே. இராணுவத்தின் மீது, இராணுவ தளவாடங்கள் மீது, மருத்துவமனை, அணைகள் மீது நடத்தி இருக்குமே. இந்தியா அங்கு இருக்கும் இராணுவம் மீது கூட தாக்குதல் நடத்தவில்லை. இலக்கை தேர்வு செய்து துல்லிய தாக்குதல் என்பது நடத்தப்பட்டிருக்கிறது.         அங்கு தீவிரவாதிகள் இருந்தார்கள் என்பதற்கு தீவிரவாதிகளே அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள்.         போர் என்பது வேண்டாம். ஆனால் தாக்குதல் நடத்திய தீவிரவாத குழுக்களை இருக்க கூடாது. வேரோடு நீக்கப்பட வேண்டும். ஆனால் இதற்கு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடி நிச்சயம் தரப்படும். இன்று கூட பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதியில் இருக்கும் இந்திய மக்களை கொன்றது. பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு போர் வேண்டாம் என்று கூவிய நபர்கள் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு எதாவது சொல்லிருப்பாங்கனு நினைக்கறீங்க? எங்க இந்த தாக்குதலுக்கு மோடி’கு புகழ் குடுத்துவிட்டா அவர்க்கு உண்டான முகம் பெருசாகிவிட்டால் கஷ்டம் ஆகிடுமோ, தேர்தலில் வெற்றி கிடைத்து விடுமோ என்று தமிழ் நாட்டில் உள்ள பெரிய பெரிய செய்தி ஊடகங்களே இந்திய இராணுவத்திற்கு எதிராக, பொய் செய்திகளை பரப்புகிறார்கள் என்பது வெக்க கேடு. இந்தியாவில் இருக்கும் இந்து, இஸ்லாம், கிருத்துவம், புத்தம் என அனைவரும் நண்பர்கள் தான். அதை சீர் குலைக்க நினைக்கும் நபர் வெளிநாட்டில் இருந்து வந்தாலும் சரி உள்ளூர் துரோகிகளாக இருந்தாலும் சரி அது நடக்காது. எங்களிடம் இருக்கும் சகோதரத்துவம் மாறாது. ஆனால் மதம் பார்த்து கொலை செய்த தீவிரவாதிகள், தீவிரவாத குழுக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தீவிரவாதத்திற்கு மதம் இல்லை. ஒரு நபரை கொல்ல சொல்லி எந்த மதமும் போதிப்பது இல்லை. மத போர்வையில் வரும் தீவிரவாதிகளும், இங்கு இருக்கும் துரோகிகளும் தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும்.! இந்திய நாட்டு மக்கள் மீது கை வைத்தால் இந்திய அரசாங்கம் வரும் என்று நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. அதே போல் உள்ளூர் துரோகிகளுக்கு கூடிய விரைவில் தக்க தண்டனை தரப்படும் என்பதையும் நம்புவோம். ஜெய் ஹிந்த்!


    

கருத்துரையிடுக

0 கருத்துகள்