Burari Death Case Explained in Tamil – 11 பேரின் மர்ம மரணம் பின்னாலிருந்த உண்மை
Burari Death Case – 11 பேரின் மர்ம மரணம் (Full Story in Tamil)
ஒரே வீட்டில் 11 பேர் தூக்கில் – இந்தியாவை அதிரவைத்த சம்பவம்:
ஒரே வீட்டுல, 11 நபர்கள், ஆலமர விழுதுபோல தூக்குல தொங்கிட்டு இருந்தாங்க. அதுவும் நிச்சயதார்த்தம் நடந்த வெறும் 13 நாட்கள் இடைவெளியில்… இப்படி ஒன்னு நடக்கும்னு யாரும் எதிர் பாத்திருக்கவே மாட்டாங்க…
ஜூலை 1, 2018 – அந்த காலையின் அதிர்ச்சி அழைப்பு:
ஜூலை 1 2018, காலை 7:25. காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வருது. தொலைபேசியில் அழைத்தவர்கள் அங்க நடந்ததை சரியாக சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் இருந்தாங்க.
எப்பவும் போல ஒரு சாதாரண சம்பவமாக இருக்கும்னு இருக்கும்னு நினைச்சு ஒரு காவலர் அந்த இடத்துக்கு அனுப்பப்படுகிறார்.
ஆனா.. அந்த இடத்துக்கு போன அந்த நபரால அங்க ஒரு நிமிஷம் கூட நிக்க முடியாமல், தன்னோட மேலதிகாரிக்கு அழைக்கிறார்.
மேல் அதிகாரி… அந்த காவலரின் பதட்டமான குரலை கேட்டு…
ஏதோ பெரிய விஷயம் நடந்துருக்குனு, அவரும் அவருடைய குழுவும் அந்த இடத்துக்கு விரைகிறார்கள்.
அவங்க பார்த்த அந்த ஒரு காட்சி, அவர்களோட வாழ்நாள் முழுவதும்…
மறக்க முடியாத என்ற அளவுக்கு இருந்துச்சு
காவல் அதிகாரிகளுக்கு மட்டும் இல்ல… பல கொடூரமான குற்றம் நடந்த இடத்தை பார்த்த செய்தி சேகரிப்பாளர்களையும் சரி, தடயவியல் நிபுணர்களையும் (forensic experts) அந்த காட்சியை மிரட்டி எடுத்தது.
அங்க நடந்த அந்த விஷயம் கேட்கும் பொழுது உங்க மனசு ரொம்ப பாதிக்கும். ஊரே பார்த்து, பொறாமைபடும் அளவிற்கு சந்தோசமா இருந்த ஒரு குடும்பத்திற்கு அன்றைக்கு என்னதான் நடந்துச்சு.
இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, அந்த மாநில முதலமைச்சரையும் அங்கே வர வைத்த, ‘11’ என்ற ஒரு மர்ம எண்ணோடு இணைந்த புராரி பகுதியில் நடந்த மரணங்கள் பற்றி தான் இந்த பதிவுல பாக்க போறோம்”.
இது தமிழ் decodes வழங்கும் Behind Closed Doors
வெளியில் சந்தோஷம்… உள்ளே மர்மம் – சுண்டாவத் குடும்பத்தின் வாழ்க்கை:
17 ஜூன் 2018, சம்பவம் நடக்கறதுக்கு 13 நாட்களுக்கு முன்னாடி, பிரியங்காவுக்கு பிரமாண்டமா நிச்சயதார்த்தம் பண்ணி முடிக்கறாங்க சுண்டாவத் குடும்பம்.
மூன்று தலைமுறைகள்… மொத்தம் 11 பேர்… . டெல்லி புராரி என்ற பகுதியில் சொந்தமாக வீடு கட்டி அதில் மளிகை கடை, அது போக பலகைக்கடை (plywood shop) என பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும், சந்தோஷமான குடும்பமாக இருந்தது.
ராஜஸ்தானிலிருந்து டெல்லி வரை – குடும்பத்தின் ஆரம்ப பயணம்:
இந்த குடும்பத்தின் பூர்வீகம் ராஜஸ்தான். குடும்பத்தின் தலைமை,
போபால் சிங். அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நபர். அவருடைய மனைவி நாராயணி தேவி.
விவசாயம் தான் இவர்களின் முக்கிய வாழ்வாதாரம். ஆனா சூழ்நிலை காரணமாக அவர்களுடைய நிலத்தை விற்று, டெல்லிக்கு குடிபெயர்கிறார்கள்…
ஆரம்பத்துல இவங்க இரண்டு பேர் மட்டுமே டெல்லிக்கு வராங்க. அதன் பின்
அவருடைய மகள் பிரதீபா’வின் கணவர் இறப்பிற்கு பின், மகளையும் பேத்தி பிரியங்காவையும் டெல்லிக்கு வரவைக்கிறார்கள் போபால் மற்றும் நாராயணி தேவி.
அதன் பின் தன்னோட சொந்த மாநிலத்தில் இருந்த மகன்கள் லலித், அவருடைய மனைவி டீனா, அவர்களுடைய மகன் சிவம்,
பவ்னேஷ், அவருடைய மனைவி சவிதா, அவர்களுடைய குழந்தைகள் நீத்து, மேனகா, துருவ் என எல்லாரையும் டெல்லி’கு வரைவைக்கிறார்கள்.
இப்படி மூன்று தலைமுறைகள், 13 வருடங்களாக, ஒரே வீட்டுக்குள், ஒரே குடும்பமாக வாழ ஆரம்பிக்கிறார்கள்…
ஒரு விபத்து… ஒரு இழப்பு… அதற்குப் பிறகு மாறிய வாழ்க்கை:
2004’ம் ஆண்டு தொழிலில் பணம் வாங்குவதில் ஏற்பட்ட சண்டையில் லலித்தை, பலகைக் கடையில் உள்ளே தள்ளி நெருப்பை பற்றவைத்து கொல்ல முயற்சித்தார்கள். அதில் உயிர் தப்பித்தலும், அவருடைய பேசும் திறனை இழக்கிறார். இதில் இருந்து மீண்டு வருவதற்குள் எல்லாமே தலைகீழாக மாற ஆரம்பிக்குது.
குடும்பத்தை வழிநடத்தி கொண்டிருந்த போபால் சிங் சுவாச கோளாறு காரணமாக 2006’ம் ஆண்டு உயிர் இழக்கிறார். இந்த இழப்பு மிக பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்த துயர சம்பவங்கள், குடும்பத்தை வழிநடத்த போதுமான அனுபவம் இல்லாத காரணம் என திணறி கொண்டிருந்தது அந்த குடும்பம்.
“அப்பா திரும்பி வந்தார்…” – லலித்தின் மாற்றம்:
போபால் இறந்த 10’வது அந்த வீட்டில்… லலித் உடலில் அந்த
குரல் மீண்டும் கேட்க ஆரம்பிச்சது
“அது லலித்தோட குரல் இல்ல…”
“அவரோட அப்பாவின் குரல்…”
இதுதான் இவர்களுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்ற போகுதுனு தெரியாம “அப்பா வந்துட்டாங்கனு” சந்தோசமா துள்ளி குத்துச்சாங்க..
அந்த நாளுக்கு அப்புறம், அந்த வீட்டில் ஒரு விஷயம் மாறிச்சு.
"யாரும் தனியாக யோசிக்கலை
யாரும் கேள்வி கேட்கலை
ஒருத்தர் நினைக்கறதா
குடும்பமா பின்பற்ற ஆரம்பூச்சாங்க"
டைரிகள், கட்டுப்பாடுகள், பயம் – மெதுவாக கட்டுப்பாட்டில் சிக்கிய குடும்பம்:
கொஞ்சம் கொஞ்சமா தன்னுடைய அப்பாவின் இடத்திற்கு வராரு, “லலித்…
அந்த வீட்டின் தலைவராக மாற ஆரம்பிக்கிறார்.
முதல்ல, சின்ன சின்ன ஆலோசனைகள், படிப்படியாக அது உத்தரவுகளாக மாறியது…
எப்போ தூங்கணும், எப்போ எந்திரிக்கணும், எப்படி பிராத்தனை பண்ணனும், குடும்பத்தில் யாரை கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பேட்டில் பதிவு பண்ண ஆரம்பூச்சாங்க.
அவங்க அப்பா எல்லாத்தையும் பாக்கறாங்கனும் பயம் வர ஆரம்புச்சுச்சு. இது எல்லாமே அப்பாவின் ஆன்மா, தன் வழியாக வழிநடுத்துகிறது எனவும் குறிப்புகள் இருந்தது.
இப்படி குடும்பம், பணம் என எல்லா இடத்திலும் தனது ஆதிக்கத்தை காட்டினார். என்னதான் ஆதிக்கம் காட்டி இருந்தாலும் அவர்கள் குடும்பம் சந்தோசமாகவும், தொழில் வளரவும் ஆரம்பித்தது. பொருளாதாரத்திலும் வளர்ந்து வந்தார்கள்.
ப்ரியங்காவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த 13வது நாள்,
தன்னுடைய வழக்கமான வாழ்க்கையை ஆரம்பித்த புராரி மக்கள்,
அன்றாடம் பொருள் வாங்க லலித் கடைக்கு வர ஆரம்பித்தார்கள்.
ஜூலை 1 காலை – கதவை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி:
வழக்கமாக அதிகாலை 5:30 மணிக்கு திறக்கும் கடை, 7 மணி ஆகியும் திறக்காமல் இருந்தது. எப்பவும் நடைப்பயிற்சிக்கு வரும் லலித் வரவில்லை என்று குருச்சரன் சிங், லலித் வீட்டற்கு சென்று பார்த்தார்.
அவர்கள் வீட்டு கதவு பூட்டப்படாமல் இருந்துச்சு, கடை திறக்கப்படவில்லை,
எதோ சரியாக இல்லை என்று நினைத்து, அவர்கள் வீட்டு கதவை திறக்கிறார்.
அவர் பார்த்த அந்த ஒரு காட்சி இதுதான்.
லலித் வீட்டில் இருந்த 11 நபர்கள், வீட்டிற்கு நடுவில், வெளுச்சத்திற்காகவும், காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த கம்பியில், ஆலமர விழுது போல உயிரற்ற நிலையில் தொங்கி கொண்டிருந்தாங்க.
இதுக்கு அப்பறம் நடந்ததை தான், பதிவின் ஆரம்பத்துல பார்த்தோம். இங்கு நடந்த செய்தி நாடு முழுவதும் பரவியது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த வீட்டின் முன்பு கூட ஆரம்பித்தார்கள்.
இது கொலையா? தற்கொலையா? – மக்களின் சந்தேகம்:
தங்களுடைய அன்றாட வாழ்வுக்கு தேவையான பால் முதல் வீட்டு குளிர்சாதன பெட்டியில் இருந்தது. வெறும் 13 நாள் இடைவெளியில் எதற்கு தற்கொலை செய்ய வேண்டும்,
இது கொலையாக தான் என்று மக்கள் பேச ஆரம்பித்தார்கள்.
அப்போதைய முதலமைச்சராக இருந்த திரு. அரவிந்த் கெஜ்ரிவால், சம்பவ இடத்திற்கு நேராக வரும் அளவிற்கு மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதன் பின்பு விசாரணையை ஆரம்பித்தனர் காவல்துறையினர்.
அந்த விசாரணையில் வெளிவந்த தகவல்கள் காவல்துறையினர் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் உறையவைத்தது.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை:
உண்மை எப்போதும் கற்பனையை விட விசித்திரமானது (Truth is always stranger than fiction) என்று சொல்லுவாங்க. அப்படி காவல்துறை விசாரணையில் வெளிவந்தது இதுதான்.
இது தற்கொலையோ, கொலையோ இல்லை. லலித் எழுதச் சொன்ன, அந்த குறிப்பேட்டில் இருந்த குறிப்புகளில் இதற்கான விடை இருந்தது.
தனது வாழ்நாளில் ஏற்பட்ட மிக பெரிய சம்பவங்கள், லலித்துக்கு ஆழமான மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. அந்த மன அழுத்தத்தை சரியான நேரத்தில் கவனிக்காததால்,
அது மெதுவாக ஒரு மரமாக வளர ஆரம்பிச்சது, அந்த மரத்தின் நிழலில், தன்னோட குடும்பத்தையே இழுத்து கொண்டுபோனார்.
அதாவது ஒருவரின் மனஅழுத்தம் (stress) … மெதுவாக ஒரு உளவியல் பிரச்சினையாக மாற ஆரம்பித்தது. முழு குடும்பத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த “பகிரப்பட்ட மனநிலை கோளாறு” (shared psychiatric disorder) ஆக மாறியது.
குடும்பம், பொருளாதாரம் என எல்லாத்திலும் இவருடைய முடிவுகள் சரியாக இருந்ததை நம்பி, என்னதான் பயம் இருந்தாலும், லலித்தின் வார்த்தையில், அப்பா நம்மை சிறப்ப வழிநடத்துவருனு, கண்முடித்தனமான நம்பிக்கை வளர ஆரபிச்சுது.
அந்த நம்பிக்கை உயிரை எடுக்கும் என்பதை, அவர்கள் கடைசி நிமிஷம் வரைக்கும் கூட உணரவே இல்லை. இறந்த அப்பாவின் ஆன்மா தங்களை வழிநடத்துறதா நம்பி, ஒரு சடங்கை அவங்க செஞ்சிருக்காங்க.
அந்த சடங்கில் குடும்பத்தில் உள்ள 11 பேரும் கை, கால்கள் கட்டப்பட வேண்டும். கண்களை மூடிக்கொண்டு, தூக்கில் தொங்க வேண்டும். இது வெறும் சடங்குதான், யாரும் சாக மாட்டோம், அப்பா வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று நம்பி அந்தச் செயலை செய்ய ஆரம்பூச்சாங்க.
இதில் 15 வயதான இரண்டு சிறுவர்கள் உட்பட, யாருமே அந்த ஆபத்தை உணரவில்லை உயிர் பிரியும் அந்த கடைசி தருணம் வரை.
11 பேர், 11 டைரிகள், 11 வருடம் – ஒரு பயங்கர மாதிரி:
இறுதியில்தான் தெரியுது... '11' என்பது ஒரு சாதாரண எண் இல்லை, அது ஒரு மாதிரி (Pattern).
11 நபர்கள்... 11 வருடமாக 11 குறிப்புகள்... ஏன் அந்த வீட்டின் ஜன்னல்கள் கூட 11! அதுமட்டுமல்ல 11 குழாய்களும் சுவற்றில் பாதிக்கப்பட்டிருந்தது. காரணம் தெரியவில்லை.
இது எல்லாம் சாதாரணமா நடந்ததா…? அல்லது யாரோ திட்டமிட்டு கட்டிய ஒரு நம்பிக்கையா…?
இது ஒரு Crime Story இல்ல… ஒரு எச்சரிக்கை:
இது ஒரு உண்மை குற்ற சம்பவம் மட்டும் இல்ல, ஒரு குடும்பம், நம்பிக்கையை நம்பி, மூடநம்பிக்கைக்கு அடிமையாகி, தங்களோட உயிரையே இழந்த சோக கதை…
ஒரு விஷயம் மட்டும் தெளிவா இருக்கு, நம்பிக்கை நல்லது, ஆனா அது கேள்வி கேட்காத அளவுக்கு அதிகமா ஆகும்போது, அது ஆபத்தாக மாறும்.
இங்கு ஒரு நபருக்கு ஆரம்புச்சது, ஒரு வீட்டுக்குள் மாறி, ஒரு நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது.
அவர்களுக்கு அது தற்கொலை இல்லை… “ஒரு சடங்கு…”
Post a Comment