வரி விதிப்பது சரியா? (Is taxation right?)
ஒரு நாடு, நாட்டின் வளர்ச்சிக்கான முக்கியமான நிதி என்பது அந்த அந்த நாடுகளின் நிலப்பரப்பு, இயற்கை வளங்கள் தொழில் என பல்வேறு விஷயங்களை சார்ந்து இருக்கும். அதில் இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. ஆனால் சிறிது காலமாக வரியை பற்றிய பல எதிர்மறையான கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதுவும் முக்கியமாக மகிழுந்தின் மீதான வரி பற்றிய காணொளிகள். மகிழுந்தின் மீது 30% வரி 50% வரி, மகிழுந்து தயாரித்த நிறுவனத்திற்கு கூட அந்த அளவு வருமானம் இல்லை என ஏகப்பட்ட காணொளி அடுத்து அடுத்து. மகிழுந்தை விட அதிகமான விற்கப்படும் இரு சக்கர வாகனத்திற்க்கான வரியை பற்றி எந்த காணொளியும் இல்லை. நிஜமாகவே மகிழுந்தின் மீதான வரி நடுத்தர குடுபதைத்தான் பாதிக்கிறதா? அல்லது 30 இலட்சம் 50 இலட்சம் குடுத்து மகிழுந்து வாங்கும் நபர்கள் தங்களை நடுத்தர குடும்பம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்களா? நடுத்தர குடும்பத்தை பாதிக்கிறது வரி அதிகமா இருக்கிறது என்று பேசும் நபர்கள் இரு சக்கர வாகனத்தின் மீதான வரியை பேச மறந்து ஏன்? வரி அதிகமா இருக்க காரணம் என்ன? வரி விதிப்பது சரிதானா? இந்த ஒரு பதிவில் பார்ப்போம்.
இது Tamil decodes வழங்கும் “Beyond the Basics”.
பார்ச்சுனர் மகிழுந்தின் மீதான வரி. (Fortuner Car Tax)
2 வருடத்திற்க்கு முன்பு வந்த காணொளியில் வந்த சில விடயங்கள் இதோ. ஒரு Toyota Fortuner மகிழுந்துவின் அடிப்படை விலை 26,27,000 ரூ அதற்கான GST 28%, Cess 22% என ரூ 13,00,440 வரி வழியாக அரசாங்கத்திற்கு செல்கிறது. அதுபோக வாகனம் பதிவு செய்ய 4,97,000, Green Tax 39,280, TCS tax 39,280 (Can be claimed), என வரி வழியாக மட்டுமே 18L வருகிறது. Toyota நிறுவனத்திற்க்கு 45K மட்டுமே இயக்க லாபமாக (Operating profit) வருகிறது என்று அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது எந்த அளவு உண்மை என்பது பற்றி கீழே காண்போம். அந்த காணொளியில் குறிப்பிட்டுருந்தது போல அரசாங்கத்திற்கு 18L வருவாயாக செல்கிறது. அது மத்திய மாநில அரசாங்கத்திற்கு சென்றுவிடும்.
ஏன் இந்த அளவு அதிகமான வரி என்ற கேள்வி வரும். இந்த மாதிரியான வரிதான் எல்லாருக்குமானு கேட்ட இல்ல. இங்க இந்த அளவு வரி விதிக்க காரணம் இது ஆடம்பர மகிழுந்து. அது மட்டுமல்ல GST வரி அடக்கு (Tax Slab) தான் காரணம். SUV 4M கு மேல் வாகனம் இருந்தால் அதற்க்கு 28+22 வரி விதிப்பார்கள்.
![]() |
| GST Slab On Cars Based On Size and CC |
இங்கே Fortuner மகிழுந்தின் நீளம் 4795 MM அதாவது 4.79 M எனவே இதற்கான வரி என்பது அதிகம் ஆகிறது.
சரி இந்த வாகனம் வாங்க வேண்டும் என்றால் சாதாரண அல்லது நடுத்தர மக்களால் வாங்க முடியுமா என்றால் முடியாது. இந்த மகிழுந்தை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச வருட வருமானம் தோராயமாக 30L தேவை என எடுத்துக்கொள்வோம். 30L வருட வருமானம் வைத்திருக்கும் ஒரு நபர் அரசாங்கத்திற்கு 5,90,000 ரூ வருமான வரியாக கட்ட வேண்டும்.
பல social media influencer இங்கே நமக்கு தவறாக வரியை கணக்கிட்டு காட்டுகிறார்கள். அதாவது 30L * 30% 9L வருமான வரி என்று கூறுவார்கள். அது கூட பரவயில்லை 2L வருமானம் உள்ள ஒருவர் 30% வருமான வரி அதாவது 60K செலுத்த வேண்டும் என்று பல தவறுதலான விஷயங்கள் நம் மீது திணிக்கப்படுகிறது.
வருமான வரியும் வரி அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
![]() |
| Income Tax Slab |
முதல் 3L வரை வருமான வரி கட்ட தேவையில்லை. 3 முதல் 7L வரை 5% என அடுக்குகளாகவே வருமான வரி கணக்கிடப்படுகிறது. அது 5L வருமானம் உள்ள நபராக இருந்தாலும் சரி 50L வருமானம் உள்ள நபராக இருந்தாலும் சரி.
Okay back to topic ஒரு 40L மதிப்புள்ள மகிழுந்து வாங்க ஒரு நபர் GST 18,00,000 வரியாக கட்ட வேண்டி உள்ளது. உலகில் உள்ள வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்டிடுகையில் இந்த வரி எந்த அளவு அதிகமாக உள்ளது என்பதை காணலாம்.
![]() |
| Car Tax In Other Countries |
![]() |
| Overall Tax Percentage in Other Countries |
இங்க அந்த அந்த நாடுகளுடைய பணத்தின் அடிப்படையில் விலை மாற்றியிருக்கிறது. GST, VAT , Tax எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிடப்பட்டிருக்கிறது. கடைசியில் பார்க்கும் பொழுது இந்தியாவுடைய வரி என்பது அதிகமாக தான் இருக்கிறது.
Why GST Is Too High
இதிலும் நாம் பார்க்க வேண்டியது இது ஆடம்பர மகிழுந்து. இந்த அளவு வரி விதிக்க இன்னும் ஒரு காரணம் அதிக நபர்கள் வாங்குவதை தடுப்பதற்க்காக. சுற்றுச்சூழல் மேம்படுத்த மற்றும் பொது போக்குவரத்து பயன்படுத்துவதை மறைமுகமா ஊக்குவிக்கவும் இது மிக பெரிய அளவில் பயன்படுகிறது. இங்க ஆடம்பர மகிழுந்து ஏற்படுத்தும் தாக்கத்தையும் அடிப்படையாக கொண்டுதான் வரி விதிக்கப்படுகிறது. இது இறக்குமதி வாகனம் அல்ல.
அரசாங்கம் தனது இலாபத்திற்காக மட்டுமே வைத்து கொள்கிறதா? Government Alone Enjoy This Revenue:
இந்த வரி அரசாங்கம் பல நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. அதுகூட செல்வம் மறைமுகமா பகிரவும் படுகிறது. இங்கு ஆடம்பர மகிழுதுக்குத்தான் வரி அதிகம். இது சாதாரண மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவது இல்லை. ஏன் என்றால் இங்கு மகிழுந்து என்பது இன்றளவும் பல நபர்களுக்கு மிக பெரிய கனவாக மட்டுமே உள்ளது. இங்கு பல நபர்களால் மகிழுந்திற்கு விதிக்கப்படும் வரி பற்றி பேசிய அளவிற்கு இருசக்கர வாகனத்தின் மீதான வரியை பேசவில்லை. இருசக்கர வாகனத்திற்கும் 28% வரி என்பது விதிக்கப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனத்திற்கு 40000 மட்டும்தான் கிடைக்குமா? Government Earns 18 Lakhs Really Manufacturer Earn Only 40,000?
Yes அரசாங்கம் இந்த ஒரு வாகனதின் வழியாக மட்டுமே 18L வருவாய் எடுக்கிறது என்பது உண்மைதான். ஆனால் Toyota போன்ற நிறுவனங்கள் 45K மட்டும்தான் லாபம் எடுக்குமா என்பதை பார்ப்பதற்கு முன்பு Suzuki, Tata போன்ற நிறுவனங்கள் 40K முதல் 65K வரை ஒரு மகிழுந்துக்கு லாபம் எடுப்பதாக அந்த ஒரு காணொளியில் பதிவிடப்பட்டிருந்தது.
நுழைவு நிலை (Entry level) மகிழுந்துக்கே இந்த அளவு வருமானம் இருக்கும் பொழுது ஆடம்பர மகிழுந்துக்கு குறைந்தபட்சம் 1.5L முதல் 2L வரை வருமானம் இருக்கும். இது வெறும் யுகம் மட்டுமே. ஆடம்பர மகிழுந்துக்கு 5% முதல் 10% வரை லாபம் என்பது மகிழுந்தின் அடிப்படை விலையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அது அந்த நிறுவனத்திற்க்கு மட்டுமே தெரியும்.
அது மட்டுமல்ல இது போன்ற மகிழுந்துகளை பழுது பார்க்க அந்த அந்த நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தான் விடுவார்கள், அதுகூட அதற்கான உபரி பாகங்களில் இருந்து வரும் வருமானம் என நீண்ட கால வருமானம் இருக்க கூடிய ஒரு தொழில். எனவே விற்பனை என்ற ஒரு நிகழ்வின் அடிப்படையில் நாம் லாபம் என்பது தீர்மானிக்க முடியாது.
பிற நாடுகளின் வருமான வரி அளவு: Income Tax In Other Countries:
நாம் இங்கு பார்த்த வளர்ந்த நாடுகளில் விதிக்க படும் தனி நபர் வருமான வரியை விட இந்தியாவில் தனி நபருக்கான வருமான வரி என்பது குறைவு தான். அதுவும் வருமானத்திற்கேற்பவே வரி விதிக்கப்படுகிறது. Direct Tax Code பத்தின விவாதம் காணொளிகள் தற்சமயம் அதிகமாக வருகிறது. ஆனால் என்ன கொடுமை என்றால் DTC’ல் வரி எவ்வளவு என்பது பற்றிய எந்த வித தகவலும் வெளி வரவில்லை. DTC கொண்டுவர பேசபட்ட காலகட்டம் 2010 அதை அடிப்படியாக வைத்து மிக பெரிய youtube channel’கள் பேசி வருவது ஆச்சர்யமாக இருக்கு.
இது போன்ற காணொளிகளை பார்த்து நம்ம எவ்வளவு வரி கட்டறோம், ஏன் என்றால் இந்தியா அப்படித்த இருக்கும்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. ஒரு ஒரு நாடுகளிலும் ஒரு ஒரு விஷயங்கள் அதிகமா தான் இருக்கும்.
டாலர் மதிப்பு (Dollar Value):
இன்னொரு விஷயத்தையும் சேர்க்க விரும்புற இந்தியாவின் ஒரு ரூபாய் நமக்கு 1 ரூபாய் தான். அது போல அந்த அந்த நாடுகளில் பயன்படுத்தும் பணத்தின் மதிப்பும். நாம் சொல்வது போல 1 டாலர் 86 ரூபாய் என்பது இந்தியாவிற்கு மட்டும்தான் அமெரிக்கர்களுக்கு இல்ல. அங்க 1 டாலர் = 1 டாலர் மட்டுமே. நாம் பார்க்கும் பல Youtube சேனல்களில் அமெரிக்காவில் ஒரு மஞ்சள் கொத்தின் விலை இந்திய மதிப்பில் 300 ரூபாய் என்று கூறுவார்கள். அங்கேயே சம்பாதித்து அங்கேயே வாங்கும் நபர்கள் எதற்காக இந்திய மதிப்பில் மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. மஞ்சள் கொத்து 3.45 டாலர் என்றால் 3.45 டாலர் மட்டுமே. 300 ரூபாய் குடுத்து வாங்க போவது இல்லை.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய 1 ரூபாய் வியட்நாமில் 292 Dong. அதே மஞ்சள் இந்தியாவில் 20 ரூபாய் என்று வைத்து கொள்வோம். இந்தியாவில் இருந்து கொண்டு 5840 டாங் விலை கொடுத்து மஞ்சள் வாங்கினோம் என்று சொன்னால் எப்படி அர்த்தம் இல்லாமல் இருக்குமோ அப்படித்தான் 1 டாலர் 86 ரூபாய். இந்தியாவில் சம்பாதித்து வெளிநாடுகளில் சென்று செலவு செய்தால் அல்லது வெளிநாட்டில் சம்பாதித்து இந்தியா கொண்டுவந்தால் மட்டுமே அது பொருந்தும் அதாவது 1 dollar = 86 rupees.
அதுபோல இந்த ஒரு மகிழுந்தின் வரி அதிகம் என்பதனால் அதை அடிப்படையாக வைத்து நம்ம மற்ற விஷயங்களை தீர்மானிக்க முடியாது. அதாவது அனைவருமே வரி அதிகம் செலுத்துகிறோம் என்று. அதே போல் GST. Gstகு முன் Vat என்ற வரி விதிப்பு முறை இருந்தது. பழைய வரி மற்றும் gst இரண்டுமே பார்த்தால் மட்டுமே வரி பற்றிய முழுமையான விவரம் தெரியும். அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
Yes இந்தியாவில் மாற வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது. அதை பேசினால் மட்டுமே மாறும். பேசுவோம். மாற்றம் நம்மில் இருந்து நிகழட்டும்.




1 கருத்துகள்
Very good information thanks for sharing
பதிலளிநீக்கு