இது தமிழ் Decodes வழங்கும் “Beyond the Basics”
உலகம் முழுவது பேசு பொருள் ஆகியுள்ள ஒரு விஷயம்னா அது Deepseek AI. இதுவும் ChatGPT போன்ற உரையாடலை அடிப்படியாக கொண்ட ஒரு AI. ChatGPT வந்த புதிதில் மிக அதிக அளவில் பயனாளர்களை பெற்றது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நவம்பர் 2022’ல் முதலில் வெளியிடப்பட்ட ChatPGPT 5 தினங்களில் 10,00,000 (10 இலட்சம்) பயனாளர்களை ஈர்த்தது.
ஜனவரி 2023’ல் 10,00,00,000 (10 கோடி) பயனாளர்களை பெற்றது. இது மிக பெரிய விஷயமாக கருதப்பட்டது. ஏன் என்றால் ஒரு தொழில்நுட்பம் வந்த விரைவில் இந்த அளவு பயனர்களை பெறுவது என்பது மிக பெரிய விஷயம். Youtube, Google போன்ற பெரிய பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்களை ஒப்பிடுகையில்.
Deepseek’ம் அதுபோல வர வாய்ப்பு அதிகம். ஏன்? இது AI’ல் வெளி முதல் வந்த திறந்த மூல (open source) மாதிரி. தற்பொழுது வரை 16 இலட்சம் பயனர்களை கொண்டுள்ளது. தற்பொழுது புதிதாக வரும் பயனாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காரணம் இணைய தாக்குதல் (Cyber Attack)
இந்த Deepseek AI’ஆல் மிக பெரிய தொழில்நுட்ப நிறுவங்களான Apple, Alphabet, Microsoft, முக்கியமாக சில்லுத்தொகுப்பு (chipset) மற்றும் வரைவியல் முடுக்கி அட்டை(Graphics card ) தயாரிக்கும் நிறுவனமான Nvidia’வின் பங்கு புள்ளிகள் மிக பெரிய அளவில் விழுந்துள்ளது. காரணம் Deepseek வெற்றி.
Deepseek ஒரு AI மாதிரி. இது ஹாங்சோ’வில் உள்ள AI ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்பட்ட AI. இது DeepThink R1 மற்றும் V3 (ஆழ்ந்த சிந்தனை) மாதிரியை அடிப்படையாக கொண்டுள்ளது. தற்பொழுது உள்ள AI மாதிரியில் முதல் 10 இடத்தில இந்த மாதிரி இடம் பிடித்துள்ளது என்பது ஒரு சிறப்பு. V3 மாதிரி GPT4’க்கு இணையாக இயங்க கூடிய ஒன்று என Deepseek தயாரித்த நிறுவனம் கூறுகிறது.
இன்னொரு மிக பெரிய சிறப்பு என்னவென்றால் இந்த AI தயாரிக்க ChatGPT’க்கு ஆன செலவை விட மிக மிக குறைவாகவே ஆகியுள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ChatGPT’கு ஆன செலவில் 20% - 50% மட்டுமே ஆகி இருப்பதாக Deepseek தயாரித்த நிறுவனம் கூறுகிறது.
இந்த தொழில்நுட்பம் Nvidia A100 என்ற சில்லுத்தொகுப்பை (chipset) வைத்து நிறுவி உள்ளனர். இதனால் தான் இந்த அளவு குறைந்த செலவில் நல்ல ஒரு AI நிறுவ முடிந்தது என்றும் குறிக்கிறார்.
சரி இந்த ஒரு AI’அல் அமெரிக்க நிறுவனங்களின் விலை வீழ்ச்சியடைய காரணம் என்ன?
Deepseek ஒரு திறந்த மூலம் (Open Source). இதை அடிப்படையாக கொண்டு மென்பொருளை மிகவும் குறைவான விலையில் தயாரிக்க முடியும். அது மட்டுமல்ல அமெரிக்கா சீனாவிற்கு வரைவியல் முடுக்கி அட்டை(Graphics card) ஏற்றுமதி செய்ய தடைவிதித்துள்ளது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.
இதிலும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று சீனாவில் பல விஷயங்கள் தணிக்கை செய்யப்பட்டு அல்லது சீனா அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதை மட்டுமே வெளியீடும். அது போலவே இந்த AI’ம் உள்ளது.
தற்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்படும் Deepseek பற்றிய ஒரு சில தகவல்கள் மட்டுமே இது. விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்.

0 கருத்துகள்